கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
புதுதில்லி, நவ.23- விவசாயிகளுக்கு போதிய கடனுதவி கிடைப்பதை உத்தர வாதப்படுத்துகிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டமாகும். கடந்த 1998 ஆண்டு அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டுவரப் பட்டதாகும். பின்னர், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பால் உற்பத்தி யாளர்கள், கடல் உணவு உற்பத்தியாளர்கள், பால்வளத் துறையினர், கோழிப் பண்ணைத்துறையினர், மீனவர்கள் ஆகியோருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், மீனவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த திட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். ‘நவம்பர் 21’ உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய மத்திய மீன்வளத்துறை அமைச்சரான கிரிராஜ் சிங் பேசியுள்ளார். அப்போது, “நாட்டில் 2 கோடிக்கும் மேலான மீனவர்கள் இருக்கும் நிலையில், 8,400 கடன் அட்டைகள் மட்டுமே இதுவரையில் வழங்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், கடன் அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீன வர்களின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்த்துவதே அரசின் இலக்கு” என்று கூறியுள்ளார். மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியாவாகும். இந்தியாவின் மீன் உற்பத்தி அளவு 13 மில்லியன் டன்னாக உள்ளது குறிப்பிடத்தக்கது.